Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

Saturday, May 7, 2016

திமுக - 141, அதிமுக - 87, பாமக - 2, மநகூ -1, பாஜக - 1 வெல்லும்: நியூஸ் 7 கருத்துக்கணிப்பு முடிவுகள்

DMK get 141 seats in assembly election, says survey

சென்னை: நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக - 141, அதிமுக - 87, பாமக - 2, மநகூ -1, பாஜக - 1 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும், இரண்டு தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு சம வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றது. நியூஸ் 7 தொலைக்காட்சியும், 

தினமலர் நாளிதழும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்புகளை மண்டலவாரியாக வெளியிட்டு வருகின்றனர். முதலில் மேற்கு மண்டல கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டனர். இதையடுத்து தெற்கு மண்டல முடிவுகள் வெளியாகின. அதன்பின்னர் கிழக்கு மண்டல முடிவுகள் நேற்று வெளியாகின. மேற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில் திமுகவுக்கு 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், 24 தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. 

இதேபோல தெற்கு மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில் திமுகவுக்கு 31 தொகுதிகளிலும், அதிமுகவுக்கு 24 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேமுதிக - மநகூட்டணிக்கு சிவகாசி தொகுதியிலும், பாஜகவுக்கு விளவங்கோடு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு உள்ள நிலை இருப்பதாக கூறுகின்றது கருத்துக்கணிப்பு. அதேசமயம் ஒரு தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு சமநிலை நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளில் திமுகவுக்கு 30 இடங்கள் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 9 தொகுதிகளில் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மண்டலத்தில் குன்னம், ஜெயங்கொண்டம் ஆகிய இரண்டு தொகுதிகளில் பாமகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. நேற்று வெளியான வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 41 தொகுதிகளில் திமுக 31 தொகுதிகளிலும், அதிமுகவுக்கு 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இன்று வெளியான சென்னை மண்டலத்திற்குட்பட்ட 37 தொகுதிகளில் திமுக 16 தொகுதியிலும், அதிமுக 20 தொகுதியிலும் வெல்லும் வாய்ப்புள்ளாதக கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு தொகுதியில் சமநிலை நிலவுவதாகவும் கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதுவரை முடிந்துள்ள கருத்துக் கணிப்புகளில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி 141 இடங்களிலும், அதிமுக 87 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் பாமவுக்கு 2 தொகுதிகளிலும், தேமுதிக, பாஜக தலா ஒரு இடத்தில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஒட்டன்சத்திரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் திமுக - அதிமுக இடையே சம நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

credit:tamil.oneindia